Categories
தேசிய செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…”வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஸ்டைலில்”… ப்ளூ டூத் மூலம் “பிட்” அடித்த மாணவர்…!!!!

ஆசிரியர் தேர்வு எழுத வந்த ஒருவரின் செருப்பில் புளூடூத் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக எஸ்எம்எஸ் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் கணேஷ்ராம் தக்கா என்ற 28 வயதான நபர் ஒருவர் தேர்வு எழுத வந்து இருந்தார். அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதையடுத்து அவரை சோதனை செய்தபோது வயர்லெஸ் செல்போன் ஒன்றை அவர் காதில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது தான் அணிந்திருந்த செருப்பில் ப்ளூடூத் மற்றும் செல்போன் இணைக்கப்பட்டதை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த செருப்பை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அதில் ப்ளூடூத் மற்றும் செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அவரை கைது செய்தனர் மேலும் இந்த செருப்பை 2.5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியதாக அவர் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த தேர்வு மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |