குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கடையில் மண் குடுவையில் பீட்சா செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தாலியை சேர்ந்த உணவான பீட்சா, இந்தியாவில் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றது. இந்தியாவில் பல விதமான வகைகளில் பீட்சாக்களை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். ஆனால் நீங்கள் மண்சட்டியில் பீட்சா செய்து பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள ஒரு கடையில் இப்படி ஒரு பீட்சா தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பீட்சாவிற்கு குல்ஹாத் பீட்சா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பீட்சா செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த மாதம் ஆமாச்சி மும்பை என்று சேனலில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
அதில் வெஜிடேபிள், பிரட் கிரம்ஸ், ஸ்பைசெஸ், பன்னீர், ஆகியவற்றுடன் வேகவைத்த சோளம், தக்காளி, மற்றும் சாஸ், மயோனீஸ், தக்காளி செட்சப் ஆகிவற்றை கலந்து சீசனிங்கிற்கு சாட் மசாலா, சில்லி பிளேக்ஸ், உப்பு சேர்த்து ஒரு சிறிய மண் குடுவையில் கலந்து பரிமாறுகின்றனர். சூரத்தில் உள்ள கோன் சாட் என்ற கடையில் இந்த மண் பானை பீட்சா தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த கடையைத் தேடிக் சென்று பலரும் இந்த மண் குடுவை பீட்சாவை சாப்பிட்டு வருகின்றனர்.