இங்கிலாந்தில் ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக 2050ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக 16 புதிய அணு உலைகள் உருவாக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இங்கிலாந்து நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையினால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதாவது வருகின்ற 2050ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக சுமார் 16 அணு உலைகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இவருடைய இந்த திட்டத்திற்கு அவை அமைச்சர்களும் தங்களது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார்கள்.