Categories
கிரிக்கெட்

ஐபிஎல்-லில் இருந்து குல்தீப் யாதவ் திடீர் விலகல் …. காரணம் இதுதான் ….!!!

ஐபிஎல் 2021  சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்-க்கு பயிற்சியின் போது  முழங்காலில் காயம் ஏற்பட்டது .இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.

இதுவரை குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக 7 டெஸ்டிலும் , 65 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி  174 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.சமீபத்தில்தான் இவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |