தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுள்ளது. அந்த வகையில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது.அந்த முகாமில் மாவட்ட வாரியாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 13 வது இடத்திலேயே இருக்கிறது.
அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமானவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். ஆனால் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் உள்ளது என்று கூறுகிறார்.
மேலும் தடுப்பூசி போடுவதில் பின்தங்கிய மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி இரண்டு மடங்காக அதிகரிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்களில் தமிழ்நாட்டை முதன்மை இடத்தில் கொண்டு வர வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.