Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி சாய் அபிராமி நகரில் துரைராஜ்-தேன்மொழி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் துரைராஜ் கோபி நீதிமன்றம் அருகில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதனையடுத்து கணவன்-மனைவி மற்றும் அவர்களது மகன் விஜயகுமார் ஆகிய 3 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து முன்பக்க கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முன்பக்க கதவை திறக்க முடியாததால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துரைராஜ் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |