தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் முதற்கட்ட பணியாக கடந்த 25ஆம் தேதி தென் சென்னை பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார்.
இதை தொடர்ந்து இரண்டாவது கட்ட பணியாக இன்று வடசென்னை பகுதியில் கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். அதுமட்டுமில்லாமல் முதல்வர் ஸ்டாலின் நாளை சேலம் மாவட்டம் சென்று வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைப்பார். அதன்பிறகு நாளை மறுதினம் தர்மபுரி மாவட்டம் சென்று குடிநீர் விநியோகத் திட்டம் திறந்து வைத்து பின்னர் பழங்குடியினரின் கலந்துரையாடுவார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.