அணு ஆயுத மூலக்கூறுகளும், அது தொடர்புடைய தொழில்நுட்பமும் சட்டத்திற்கு புறம்பாக பகிர்ந்து கொள்ளப்படுவது தொடர்பில், கவனம் செலுத்துமாறு சர்வதேச சமூகத்தை இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியிருக்கிறது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று, ‘விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம்’ குறித்த விவாதம் நடந்துள்ளது. இதில் வெளியுறவுத்துறை செயலரான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், இந்திய அரசு உலக அளவில் அணு பாதுகாப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது.
அணு ஆயுதங்களுடைய வலையமைப்புகள், தொழில்நுட்பம், அதன் மூலக்கூறுகள் மற்றும் விநியோக முறை போன்றவை சட்டத்திற்கு புறம்பாக பகிர்ந்து கொள்ளப்படுவதை சர்வதேச சமூகமானது, அதிகம் கவனிக்க வேண்டும். அணு ஆயுதம் இல்லாத உலகம் என்னும் இலக்கை அடைய இந்தியா உறுதியெடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதாவது சீனா, சர்வதேச விதிமுறைகளை மீறி, பாகிஸ்தான் நாட்டிற்கு அணுஆயுத பொருட்களை அளிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்தியா மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.