திமுக அரசையும், திமுக கட்சியை காப்பாற்றுவது பத்திரிக்கையும், ஊடகங்களும் தான் காப்பாற்றி கொண்டு இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி விமர்சித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்கள். சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது முதல் கட்டமாக 505 வாக்குறுதிகளை அறிவிப்பின் மூலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
பிறகு மேலும் 20 வாக்குறுதிகளை கூடுதலாக சேர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை வெளியிட்டார். இப்போது 525 அறிவிப்புகளில் ஒரு சில அறிவிப்புகள் நிறைவேற்றபட்டிருகின்றன.
ஆனால் திராவிட முன்னேற்ற தலைவரும், திராவிட முன்னேற்ற கழக அரசில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களும், திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளும் 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பச்சை பொய்யை கூறியுள்ளனர். இதற்கு நம்முடைய ஊடகங்களும் பத்திரிக்கையும் பெரிய தலைப்பு கொடுத்து போட்டுகொண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழக அரசையும், திமுக கட்சியை காப்பாற்றுவது பத்திரிக்கையும், ஊடகங்களும் தான் காப்பாற்றி கொண்டு இருக்கிறது. இந்த 4 மாத காலமாக இவர்கள் தான் திராவிட முன்னேற்ற அரசை காப்பற்றிகொண்டு இருக்கிறது. ஏனென்றால் இந்த 4 மாத காலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. கொடுக்கப்பட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என விமர்சித்தார்.