ஆப்கானில் தலீபான்களுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் அமைப்பு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் ஹரசன் அமைப்பு தலீபான்களை எதிர்த்து பல்வேறு தாக்குதல்கள் நடத்துகின்றது. மேலும் காபூல் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஐ.எஸ் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க படை வீரர்கள் உட்பட 182 பேர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து காபூல், ஜலாலாபாத் மற்றும் மசர்-ஐ-ஷரிப் பகுதிகளில் தலீபான்கள் மீது ஐ.எஸ் அமைப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 35 தலீபான்களை சுட்டுக் கொன்றதாக ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதனை தலீபான்கள் மறுத்துள்ளனர். இதனால் ஐ.எஸ் அமைப்பை குறிவைத்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதில் 80 க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பினரை தலீபான்கள் கைது செய்துள்ளனர். மேலும் ஐ.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் உட்பட பலரை தலீபான்கள் சுட்டு கொன்றுள்ளனர். குறிப்பாக தலீபான்களுக்கு போட்டியாக ஐ.எஸ். அமைப்பு வளர்ந்து வருவதே இரு தரப்பு மோதலுக்கும் காரணமாக உள்ளது.