காவிரி மேலாண்மை ஆணைய முழுநேர தலைவராக எஸ்.கே ஹல்தர் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவராக எஸ்.கே ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சவுமித்ர குமார் ஹல்தர் ஆணைய தலைவராக 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்து வரும் எஸ்.கே ஹல்தர் காவிரி ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.