Categories
உலக செய்திகள்

“உயிரிழந்த தாயின் உடையுடன் சவப்பெட்டிக்குள் வேறு உடல்.. அதிர்ச்சியடைந்த மகள்கள்..!!

அமெரிக்காவில் உயிரிழந்த தங்கள் தாய் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் வேறு ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு சகோதரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.

அமெரிக்காவின் வட கரோலினா என்ற பகுதியில், மேரி என்ற பெண், தன் மகள்களான ஜெனிபர் டெய்லர் மற்றும் ஜென்னெட்டா ஆர்ச்சர் ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மேரி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். எனவே சகோதரிகள் இருவரும் தங்கள் தாயை அடக்கம் செய்வதற்காக அஹோஸ்கி என்ற சவ அடக்க இல்லத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது தங்கள் தாயை புதைக்க வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில், அவர்களின் தாய் அணிந்திருந்த அதே ஆடையில் வேறு ஒரு நபரின் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டனர். இதுபற்றி ஜெனிபர் தெரிவித்துள்ளதாவது, இது எவ்வாறு நடக்குமென்று எனக்கு புரியவில்லை.

அதில் வைக்கப்பட்டிருந்த நபருக்கும் எங்கள் தாய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் என் தாயை விட சிறியவராக இருந்ததால், நான் கண்டுபிடித்துவிட்டேன். அதன் பின்பு நாங்கள் புகார் கொடுத்ததால், உடனடியாக உடலை மாற்றி தந்தார்கள். எனினும் எதற்காக இப்படி ஒரு வேலை நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று குழப்பத்துடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |