சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.. தனியார் குழுமத்திற்கு சொந்தமான வீடுகள் அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி போஸ் சாலை என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது..
குறிப்பாக வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்தாக பாதிக்கப்பட்டவர்கள் அமலாக்க துறையில் புகார் அளித்து இருந்தார்கள்.. ரியல் எஸ்டேட் நிறுவனம் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாகவும் புகாரளிக்கப்பட்டது.. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது. சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..
20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை சோதனை தொடர்பாக யாரிடமும் விசாரணை நடைபெறவில்லை முதற்கட்டமாக சோதனை நடைபெற்று வருகிறது.. சோதனைக்கு பிறகு இது தொடர்பாக தகவல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.