லண்டன் பூங்காவில் ஆசிரியரை கொலை செய்த நகரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பூங்காவில் இளம் ஆசிரியை சபீனா நெஸ்ஸா மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சபீனா நெஸ்ஸா சடலம் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து சி.சி.டி.வி. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் அந்த நபரின் புகைப்படம் மற்றும் பெயர் விவரங்களை லண்டன் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் கிழக்கு சசெக்ஸின் ஈஸ்ட்போர்னைச் சேர்ந்த கோசி செலமாஜ் என்றும், இவர் டொமினோ பீஸ்ஸா உணவகத்தின் முன்னால் டெலிவரி டிரைவர் என்றும் தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலோர நகரத்தில் கோசி செலமாஜை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த சில்வர் நிற நிசான் மைக்ரா காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கோசி செலமாஜ் இன்று வில்லஸ்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.