கர்நாடக மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற சிறுமியை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி கடபா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு புகாரை எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிள் அந்த சிறுமியின் வீட்டு முகவரியை கவனித்து வைத்துக்கொண்டு, அடிக்கடி அங்கு செல்ல தொடங்கியுள்ளார். இந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதை நம்பி அந்த சிறுமி அவருடன் பழகி வந்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைந்த பிறகே இது குறித்த தகவல் வெளியில் தெரிய வந்தது. சிறுமியின் தந்தை தன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கான்ஸ்டபிளிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து போலீசாரிடம் சிறுமியின் தந்தை புகார் அளிக்க, அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.