Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்தவர்களுக்கு…. இனி இது கிடையாது…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் பாதிப்பு முழுமையாக இன்னும் கட்டுப்படவில்லை. இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் பாதிப்பு பதிவாவதற்கு பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதுதான் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு தெருவில் 3 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தால் அந்த தெரு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒரு நபர் வீட்டில் தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதனால் ஒரு வீட்டில் 4 பேருக்கு தொற்று பரவுகிறது. அதுமட்டுமின்றி தொற்று இருந்தும் வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும் பரவுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த சுகாதார அலுவலர்களோடு சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, கொரோனாவால் பாதித்தவர்களை இனி வீட்டில் தனிமைப்படுத்த கூடாது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

பதினைந்து நாட்கள் வரை அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவேளை கட்டாயம் வீட்டு தனிமை வேண்டும் என்று கேட்பவர்களுடைய வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தனி அறை, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை பார்த்து அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்வார்கள். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |