ஜெர்மன் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சேன்ஸலர் Olaf Scholz, பிரிட்டனில் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட பிரெக்சிட் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
ஜெர்மனியில் நடந்த தேர்தலில், முன்னாள் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலின் CDU கட்சியை விட, SPD கட்சி, சார்பாக சேன்ஸலர் வேட்பாளராக களமிறங்கிய Olaf Scholz, சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர், பிரெக்சிட் காரணமாக தான் பிரிட்டனில் ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
அதாவது, பிரிட்டனில் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், எரிபொருளில் தொடங்கி அத்தியாவசிய பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெர்மன் நாட்டின் ஓட்டுனர்களை பிரிட்டனுக்கு அனுப்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் தெரிவித்த, Olaf Scholz, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிவிட கூடாது என்பதற்காக அதிக பாடுபட்டோம்.
ஆனால், பிரிட்டன் வெளியேற முடிவெடுத்துவிட்டது. எனவே, அதனால் ஏற்படும் விளைவுகளையும், அவர்களே எதிர்கொள்வார்கள் என்று நம்புவதாக கூறியிருக்கிறார். மேலும் இவர் தேர்தலில் வெற்றியடைந்த பிற கட்சிகளோடு இணைந்து விரைவில் ஆட்சி அமைக்கக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.