வட மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ‘குலாப்’ புயலாக உருவெடுத்து, ஒடிசா – ஆந்திரா இடையே கரையை கடந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.