Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்-டயானாவால் அழுத்தத்திற்கு உள்ளானவர்கள்!”.. யார் தெரியுமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவரும் திருமணத்திற்கு வெளியில் வைத்திருந்த உறவால், அவர்களின் பாதுகாவலர்கள் அதிகம் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவிற்கு தெரியாமல் கமீலாவுடன் பழகி வந்தார். அதே சமயத்தில், மறைந்த இளவரசி டயானாவும் கணவருக்கு தெரியாமல், James Hewitt-டுடன்  பழகி வந்தார் என்பது தெரிந்த தகவல். ஆனால், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டிருந்த  சூழ்நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளானது அவர்களின் பாதுகாவலர்கள் தான் என்று தெரியவந்துள்ளது.

அதாவது, கமீலாவை, இளவரசர் சார்லஸ் சந்திக்கச்சென்றால், அவருடன் Colin Trimming என்ற பாதுகாவலரும் எப்போதும் உடன் இருந்திருக்கிறார். அதேபோல் இளவரசி டயானா, தன் காதலரை சந்திக்க சென்றால், அவரின் பாதுகாவலர் தரைதளத்தில் காத்திருப்பாராம். மாடியில், இளவரசி டயானா அவரின் காதலருடன் இருப்பாராம்.

மேலும், கமீலாவின் வீட்டிற்கு எதிரில் தான், இளவரசி டயானாவின் காதலரான, James Hewitt-ன் வீடும் இருந்துள்ளது. எனவே, பாதுகாவலர்கள் இவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நாம் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்திலேயே உடன் இருந்திருக்கிறார்கள். மேலும் பத்திரிக்கைகள் இவர்களின் உறவை வெளியில் தெரியப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அரண்மனை பணியாளர்களாக, ஊடகத்தை சேர்ந்த 11 பேர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |