Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்தின் ஹீரோயின் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் உருவான துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது விஜய் சேதுபதி விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவரின் 46-வது படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த பொன்ராம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் VJS 46 படத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிரபல மாடல் அழகி அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனுகீர்த்தி வாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |