இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடியாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, ரவுடிகளை ஒடுக்க ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு மசோதா’ பேரவையின் அடுத்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ரவுடிகள், சமூக விரோதிகளை ஒழிக்கும் மசோதா விரைந்து சட்டம் ஆக்கப்பட்டால் போலீசாருக்கு உதவியாக இருக்கும் என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.