Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி…. பிரசவ பயத்தால் நடந்த விபரீதம் …. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிரசவ அச்சத்தால் மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் தந்தை பெரியார் நகரில் குமாரி கஞ்சக்கா என்பவர் தனது கணவர் பிரதாப் உள்காவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்கள். பிரதாப் சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிகிறார். மேலும் குமாரி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மதினி, பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்குக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய குமாரிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குமாரியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரைப்படி கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பின் சிகிச்சை பலனின்றி குமாரி திடீரென உயிரிழந்துவிட்டார். இது குறித்து கொரட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையில் குமாரி தனது மதனியின் இறுதி சடங்கிற்கு சென்றபோது 7 மாத கர்ப்பிணியான தானும் பிரசவத்தின்போது உயிரிழக்கக் கூடும், என்ற அச்சத்தில் கர்ப்பத்தை கலைப்பதற்காக மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |