Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ அப்டேட்… முதல் முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்…!!!

‘தளபதி 66’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார்.

Composer Thaman on board actor Vijay's next Tamil project - Hindustan Times

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் தளபதி 66 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் விஜய் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |