தங்க நிறத்தில் கை ஒன்று தெரிவது போன்ற புகைப்படத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
நமது விண்வெளி என்பது பல்வேறு ஆச்சரியத்தக்க அதிசயங்களை உள்ளடக்கிய ஒரு அழகான இடமாகும். அங்கு நடக்கும் அதிசயங்களை பார்ப்பதற்கு நமக்கு இரு கண்கள் போதாது. மேலும் அவ்வப்போது நாசா விண்வெளி மையம் விண்ணில் இருந்து புகைப்படங்களை அனுப்பும். அந்த வகையில் தற்பொழுது அது போன்ற புகைப்படத்தை நாசா அனுப்பி வைத்துள்ளது. அதில் விண்வெளியின் ஆழமான இருட்டில் தங்க நிறத்தில் கை போன்ற ஒரு பெரிய வடிவம் தெரிந்துள்ளது. இது இறைவனின் கை அதாவது HAND OF GOD என்று கூறுகின்றனர்.
அதிலும் சில நேரங்களில் மேகங்கள் ஒன்றாக சேர்ந்து பல வடிவங்களை தரும். அதே போன்று எங்கிருந்தோ வந்த இதனை கடவுளின் பொற்கரம் என்று கூறுகின்றனர். மேலும் இந்த வடிவமானது அதிக ஆற்றலும் நுண்ணிய துகள்களும் கொண்ட நெபுலா என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். அதாவது ஒரு நட்சத்திரம் வெடித்து சிதறி தோன்றும் பொழுது அதிலிருந்து விட்டுச் செல்லப்படும் பல்சாரிலிருந்து வருவது தான் இந்த வடிவம். அதிலும் இந்த பல்சார் 19 கிலோமீட்டர் பரப்பளவு உடையது.
இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவெனில் இந்த பல்சார் தன்னைத்தானே நொடிக்கு 7 முறைகள் சுற்றிக்கொள்ளும். இது பூமியிலிருந்து 17000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கடவுளின் தங்கத்தைப் பார்த்து இணைய வாசிகள் ‘ HAND OF MIDAS’ என்று அழைக்கின்றனர். மேலும் சிலர் இது சிவனின் மூன்றாவது நெற்றிக்கண்ணில் இருந்து உருவான நெருப்பு என்றும் அவர் காதில் குண்டலம் அணிந்து தலையில் கங்கையை வைத்திருப்பது போல உள்ளது எனவும் கூறிவருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு இணையவாசிகள் 25,000 லைக்குகளை வழங்கியுள்ளனர்.