Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கிராமங்கள் செல்வோம்” புதிதாக திட்டம்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு….!!

குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பாக ‌புதிதாக திட்டம் அமல்படுத்த இருப்பதாக சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக காவல்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் காவல்துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்பின் தேர்தல் பற்றியும், விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமமக்களின் நம்பிக்கையை பெற்றிடவும், குற்றவாளிகள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து குற்றச்செயல்களில் ஈடுபடாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் என தீவிர ரோந்து பணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனை அடுத்து காவல் நிலைய அதிகாரிகள் அவர்களின் நாள்தோறும் பணி மற்றும் பயணம் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதன் மூலமாக காவல்துறை நல்லுறவு பொதுமக்களிடம் மேம்படுவதோடு குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஏதுவாக அமையும் என காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |