தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை நாளை சேலத்தில் தொடங்கி வைப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை சேலத்தில் தொடங்கி வைப்பார். பொது மருத்துவ அறுவை சிகிச்சை, குடல் நோய், காது மற்றும் மூக்கு போன்ற 16 சிறப்புடைய துறையுடன் கூடிய இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சியிலும் ஓர் ஆண்டிற்கு 1240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் அம்மா மருத்துவமனை செயல்பட எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் 11 மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில் திண்டுக்கல் கிருஷ்ணகிரி நாமக்கல் அரியலூர் போன்ற மாவட்டங்களில் கட்டிட பணிகள் முடிந்த பிறகு தலா 100 பேர் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் கள்ளக்குறிச்சி உதகை ஆகிய மாவட்டங்களில் தலா 150 பேர் மாணவர்கள் சேர்க்கையும் மற்றும் நாமக்கல் திருப்பூர் ராமநாதபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 100 மாணவர்கள் என 850 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அரசு கூறியுள்ளது. இதையடுத்து இந்த வாரம் 12,500 கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற இருப்பதால் தடுப்பூசி முகாம் திட்டம் இந்த வாரம் நடைபெறாது . மேலும் மக்களை தேடி வரும் திட்டத்தில் பணி புரிந்த செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.