Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பட்டா பெயர் மாற்றம்” லஞ்சம் கேட்ட அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றுவதற்கு லஞ்சம் பெற்றுக்கொண்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தில் சாமியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இதில் செல்வகுமார் தாத்தா கந்தசாமியின் பெயரில் இருக்கும் நிலத்தை தன் அப்பா சாமியப்பன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக ஏர்வாடி வாணியம்பாடி கிராமநிர்வாக அலுவலரான விஜயலட்சுமியிடம் விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பட்டா பெயர் மாற்றம் செய்ய 3 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று செல்வகுமாரிடம் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் அதை கொடுக்க விரும்பாத செல்வகுமார் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தபுகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் காவல்துறையினர் அந்த அந்த அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு செல்வகுமார் ரசாயன பவுடர் தடவிய 3 ஆயிரத்து 500 ரூபாயை விஜயலட்சுமியிடம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைவாக நின்ற காவல்துறையினர் விஜயலட்சுமி மற்றும் அவரது உதவியாளர் உதயகுமாரை கைது செய்தனர்.

Categories

Tech |