Categories
அரசியல்

திமுகவிற்கு ஏன் ஓட்டு போட வேண்டும்…? கனிமொழி சொல்லும் காரணம்…!!

உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்குளம் உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை  அறிமுகப்படுத்தும் கூட்டம் விழாவில் கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது, “மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தான் பாலமாக  இருப்பவர்கள். திமுக ஆட்சியானது நாட்டிலுள்ள பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக இருக்கின்றது. திமுக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சிக்கு  வந்த வேளையில் கொரோனா பிடியில் மிகமோசமாக மாட்டிக் கொண்டிருந்தது.

இந்நிலையிலிருந்து மக்களை திமுக ஆட்சி மீட்டெடுத்து வருகிறது. திமுக அரசானது கொரோனா உதவியாக குடும்பத்திற்கு தலா 4 ஆயிரம் வழங்கியுள்ளது. திமுக ஆட்சியானது மக்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கலைஞரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறார். மேலும் மக்களிடம் அரசு திட்டங்களை சேர்க்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும்.

மக்களின் மீது அரசு கொண்டுள்ள அக்கறையை  மனதில் வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல்வரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் தடையில்லாமல் வந்து சேர திமுகவிற்கு வாக்களியுங்கள். மேலும் நிர்வாகிகள் அனைவரும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற தீவிரமாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |