தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற்றிய சரித்திரம் திமுகவுக்கு கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டார். இதில் பேசிய அவர், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தேர்தல் நேரத்திலேயே வாக்குறுதி கொடுத்தார் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று ? என்று திராவிட முன்னேற்ற கழக தலைவரிடம் கேட்கிறேன் மௌனம் சாதிக்கிறார்.
இதுவரைக்கும் கொடுக்கவில்லை… ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரைக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சரித்திரமே கிடையாது. இப்பொழுதும் நிறைவேற்றப்பட மாட்டாது. அதேபோல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களும், இளைஞர்களும் வாங்கிய கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்.
கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மாணவர்களும், இளைஞர்களும் வாங்கிய கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார். அதை பற்றி வாயே திறக்கவில்லை இதுவரைக்கும். மாணவர்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்றார்கள், இளைஞர்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்தார்கள், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். அதேபோல முதியோரையும் விட்டு வைக்கவில்லை.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டார், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார், பேசும்போது குறிப்பிட்டார், பொதுக் கூட்டத்திலேயே குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை 1000லிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார். இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் இல்லை. இளைஞர்களையும் ஏமாற்றுகிறார்கள், மாணவர்களையும் ஏமாற்றுகிறார்கள், முதியவர்களையும் ஏமாற்றுகின்ற ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கட்சி மட்டும் தான்.
நான் முதலமைச்சராக இருக்கின்றபோது மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும் என்று நான் அறிவித்தேன், சட்டமன்றத்திலும் அறிவித்தேன். திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார்கள், திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு முழுவதிலும் பேசினார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், அது மாநில அரசாங்கமே செலுத்தும் என்றார். மாநில கூட்டுறவு வங்கியில் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார், எதுவும் இதுவரை நடக்கவில்லை. அறிவிப்பு கொடுத்தார். கூட்டுறவு சங்கத்திலேயே மகளிர் சுய உதவிக்குழு பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று. இதுவரைக்கும் தள்ளுபடி செய்யல.
அதோட இன்னும் ஒரு பச்சைப் பொய்யை சொன்னார். இன்றைக்கு கிராமம் நிறைந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடைபெற்று வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு 100 நாட்களில் இருந்து 150 ஆக உயர்த்தப்படும் என்று சொன்னார் தேர்தல் நேரத்தில்…. இப்போது சட்டமன்றத்தில் என்ன சொல்கிறார் என்றால் மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று சொல்கிறார்.
இது எவ்வளவு பச்சை பொய். ஏனென்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பல லட்சம் பேர் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு அப்படிப்பட்ட பச்சைப் பொய்யை சொல்லி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தையும் இன்றைக்கு கைவிட்டு விட்டார்கள்.
அதேபோல அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தோம் எங்கள் ஆட்சியில்…. கிராமத்தில் வாழ்கின்றவர்களுக்கு ஏதாவது நோய்வாய்ப்பட்டால் கிராமத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்தோம். அங்கே ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளரை வைத்து ஒவ்வொரு தொகுதிக்கும் கிட்டத்தட்ட 6 லிருந்து 10 அம்மா மினி கிளினிக்கை திறந்தோம்…. தமிழகத்தில் 2000 அம்மா மினிகிளினிக் திறக்கப்படும் என்று சொல்லி திறந்தோம். ஏனென்றால் அங்கு இருக்கின்ற விவசாயிகள்,
விவசாய தொழிலாளர்கள், ஏழைகள் ஏதாவது நோய்வாய்ப்பட்டால் 20 கிலோமீட்டர் 30 கிலோமீட்டர் சென்று தான் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டிய நிலைய மாற்றி, அந்த பகுதியிலேயே அம்மா மினிகிளினிக்கை திறந்து அங்கே மருத்துவர் மூலமாக நோய்வாய்ப்பட்டு இருக்கின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து அரசு அம்மா அரசாங்கம். இப்போது அதையே படிப்படியாக மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கேட்டால் மக்களை தேடி மருத்துவமாம்…. இதை நாங்கள் ஏற்கனவே செய்து விட்டோம். நடமாடும் மருத்துவமனை என்ற திட்டத்தை கொண்டு வந்து எல்லா பகுதிகளையும் போய்க்கொண்டிருக்கிறோம். அதோட கிராமம் கிராமமாக மருத்துவ முகாம் நடத்தி யாருக்காவது நோய் என்றால் அதை அங்கேயே கண்டறிந்து அவருக்கு உரிய சிகிச்சை அளித்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். பெயரை மாற்றி சொல்கிறார்கள்.. ஏனென்றால் மக்களிடத்தில் அம்மா மினிகிளினிக் என்ற நல்ல பெயர் வந்தது அம்மாவுடைய அரசுக்கு. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தத் திட்டத்தை இன்றைக்கு ஒழிக்க பார்க்கிறார்கள்.
அதுமட்டுமல்ல டைட்டில் பார்க் நாங்கள் அறிவித்தோம் இப்போது பாண்டிசேரியில கொண்டு போய் போடுறாங்க. இந்த பகுதியில் அதை ஆரம்பித்தால் இந்த பகுதி மக்களுக்கு நன்மை கிடைக்கும். இன்றைக்கு வேறு ஒரு பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அங்கே ஆரம்பித்தால் இங்கே இருக்கிற மக்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும்.
உணவு பூங்காவை நாங்க கொண்டு வந்ததற்கு ஏற்கனவே முயற்சி செய்து கொண்டிருந்தோம். இப்போது இதையும் கொண்டு வரப்போகிறேன் என்று சொல்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் இவர்கள் கொண்டுவந்த திட்டமாக என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2015ல் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, இன்றைக்கு லட்சக்கணக்கான கோடி முதலீட்டை ஈர்த்து தமிழகத்தில் தொழில் வளம் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்தார்கள்.
அம்மா வழியிலேயே வந்த அம்மாவுடைய அரசு 2019 தொழில் முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடத்தி 3 லட்சத்து 5000 கோடி தொழில் முதலீட்டில் இருந்து 304 தொழில் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டோம். 04 புரிந்துணர்விலே 81 புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று உற்பத்தி துவங்கிவிட்டது. 188 திட்டங்கள் பல்வேறு பணியிலேயே, பல்வேறு நிலையில் இருக்கிறது. அதுமட்டுமல்ல நாம ஏற்கனவே தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வைத்திருந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்அவர்களை இப்போது இவர்கள் நாடி திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த மாறி ஒரு தோற்றத்தை அளித்து கொண்டிருகிறார்கள் என முதல்வர் எடப்பாடி கூறினார்.