தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளை 5 சவரன் நகை கடையில் முறைகேடு நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை மற்றும் அனைத்து பொது நகைகளையும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகை கடன்கள் பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள் ,தொகை, கடன் கணக்கு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் முகவரி மற்றும் தொலைபேசி நம்பர் போன்ற பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் அதில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நாமக்கல் அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த 10 ஊழியர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற மொத்தம் 1685 நகை கடன்கள் மூலம் 4.62 கோடியை முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட பணியின் இறுதி அறிக்கையை நவம்பர் மாதம் 20-ஆம் தேதிக்குள் மண்டல இணைப்பதிவாளர் இடம் மூலமாக பதிவாளருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் மற்றும் யார் மீது வழக்கு பதிவுகள் செய்யப்படுகிறது என்ற பட்டியலை விரைவில் வெளியிடப்படும்.