Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை… போராட்டம் நடத்திய விவசாயிகள் வருத்தம்…!!!

கர்நாடகாவில் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஊர்வலமாக சென்றவர்களை கைது செய்தனர்.

அப்போது அங்கு குருபூர் சாந்தகுமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,”கர்நாடக அரசு, விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்கிறது. டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை போலீசார் கைது செய்துள்ளனர். இது எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் என கூறினார். டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் தலைமையிலான குழு போராட்டம் நடத்தியது

அப்போது பேட்டியளித்த ராஜ்குமார் “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. தார்மீக ஆதரவு என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் வீதியில் இறங்கி போராட வேண்டியது அவசியம், என்று கூறினார் .கே.ஆர். புரத்தில் விவசாயிகள் சாக்குப் பையை தங்கள் தலையில் வைத்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் சங்க நிர்வாகி படகள்புரா நாகேந்திரா கூறுகையில்,” கிராமங்களில் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெங்களூர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் ஆதரவும் வழங்கவில்லை. டெல்லியில் பல மாதங்களாக விவசாயிகள் நடைபெறும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர். இதனை யாரும் பொருட்படுத்தவில்லை.” என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்புக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மாநிலம் முழுவதும் பஸ் ஆட்டோ வாடகை கார்கள் வழக்கம்போல் ஓடின பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டனர் .என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |