துடிப்புடனும் துணிச்சலுடனும் செயல்படக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறாமலே போகலாம். பணியாளர்களால் தொல்லை ஏற்படும். இன்று குறையாக நின்ற பணிகள் சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காக இருக்கும். தொழிலில் பயணங்களால் பொருள் சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். இன்று குடும்ப பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவை கொடுக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும் .
கைவிட்டு போன பொருட்கள் உங்களிடமே வந்து சேரும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே காணப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும் படித்த பாடத்தை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்