தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பற்றி நாளை இரண்டாம் நாள் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Categories