Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி”… கருத்து மோதல்கள் விலகிச்செல்லும்..!!

தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து சாதனை படைக்கக் கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று சொந்தங்களால் வந்த தொல்லைகள் அகலும். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி ஏற்படும். வருங்கால நலன்கருதி புதிய  திட்டங்களை தீட்டுவீர்கள். புது வாழ்வில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகிச்செல்லும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து திருப்தி அடைவீ ர்கள்.

இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். சக மாணவரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பழகுங்கள் பொறுமையை கையாளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு உணவு வைத்து விட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |