Categories
தேசிய செய்திகள்

மளமளவென சரிந்த 3 மாடி கட்டிடம்…. ஜஸ்ட் மிஸ்ஸான 30 தொழிலாளர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தததில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியிலுள்ள லக்கசந்திரா ரோட்டில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. இந்த வீடு மூன்று மாடிகளை கொண்டதாகும். இந்த வீடு 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 30 பேர் அந்த வீட்டில் தங்கி இருந்த நிலையில், நேற்று காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்கள். அப்போது மூன்று மாடி வீடு திடீரென்று இடிய தொடங்கியது . இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வரும் முன்னரே வீடு திடீரென்று மளமளவென சரிய தொடங்கியது .

நல்லவேளையாக அங்கு வசித்த 30 தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் இடிந்துவிழும் படியாக உள்ள வீட்டை அகற்றும்படி உரிமையாளர் சுரேஷிடம் அக்கம்பக்கத்தினர் கூறி வந்ததாகவும் ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வில்சன் கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு உரிமையாளர் சுரேஷ் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |