பொதுமக்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நடமாடும் வாகனங்களின் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப் போவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் மூலமாக இதுவரை தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊசி போடும் பணியில் ஈடுபட இருக்கிறது. இதனை தாசில்தார்கள் கண்காணித்து விவரங்கள் அனைத்தையும் சேகரித்து எங்கு முகாம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து துறை அதிகாரிகளும் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டு 100% தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்துமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.