Categories
தேசிய செய்திகள்

BREAKING : நாடே எதிர்பார்த்த…. “நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி”… சோதனையில் 7 to 17 சிறார் பங்கேற்க அனுமதி!!

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனம் நோவாக்ஸ் கொரனோ தடுப்பூசி மருந்து நடத்தும் பரிசோதனையில் 7 முதல் 17 வயது சிறார் பங்கேற்க மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது.

மருந்து பரிசோதனை விதிகளின்படி ஏற்கனவே 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை என்பது 3ஆவது ட்ரையல் முடிந்துவிட்ட நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் இதற்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கிடையே உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை வலியுறுத்துவது 4- 7 வயது, 7-10 வயது, 10-17 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை விரிவாக மேற்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தல் வழங்கி வந்த நிலையில் இந்தியா அதற்கான முன்னெடுப்பை தற்போது மேற்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றி கண்டுள்ள நிலையில், நோவாக்ஸ் என்று சொல்லக் கூடிய 7 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசிக்கான அனுமதி இந்தியாவில் மேற்கொள்வதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

தற்போது முதல்கட்ட பரிசோதனையில் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், இந்த அனுமதி என்பது அதை நோக்கிய நகர்வாக நாம் பார்க்கவேண்டிய உள்ளது.

Categories

Tech |