உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டுமென தேர்தல் பார்வையாளர் சாந்தா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பார்வையாளர் சாந்தா தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் சரியாக அச்சடிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஒவ்வொரு வாக்குச் சீட்டில் சரிபார்த்து வழங்கிட வேண்டுமென பார்வையாளர் சாந்தா தெரிவித்துள்ளார்.
அதன்பின் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னம் மற்றும் வாக்காளர் பெயர், அவர் போட்டியிடும் வார்டு குறித்து தகவல்கள் சுவரொட்டியில் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார். பின்னர் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒரு சில பகுதியில் ஒரே வார்டில் இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் அதனை முறையாக கண்டறிந்து வாக்காளர்கள் எந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வையாளர் சாந்த தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட நிர்வாகத்தை குறை சொல்லாத வண்ணம் வெளிப்படைத் தன்மையுடனும் மற்றும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என பார்வையாளர் சந்தா தெரிவித்துள்ளார்.