Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் பால் வியாபாரியான கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் தனது  நண்பரான கண்ணன் என்பவரும் சேர்ந்து கழுதைமேடுபுலம் பகுதியிலிருக்கும் கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலமாக இருவரும் கூடலூருக்கு கொண்டிருந்துள்ளனர் அப்போது கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது குமுளியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று  எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் கர்ணன் மற்றும் கண்ணன் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த சிவகாசியை சேர்ந்த சுப்பையா என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா, கூடலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான சுப்பையாவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |