அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்து சிந்தித்து செயல்படக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று சங்கடங்களை சாதூர்யமாக சமாளிப்பீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகள் கைகூடும். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். தாய் வழி ஆதரவில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியும் தயக்கமின்றி நீங்கள் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும்.
மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்