Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகைக்கடன்களில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி சோதனை… தமிழக அரசு உத்தரவு…!!

கூட்டுறவு நகைகடன்களில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வங்கிகளில் சோதனை நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை முறையாக ஆய்வு செய்யுமாறு கூட்டுறவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்ட நகைகடன்களை ஆய்வு செய்யவுள்ளனர்.

கூட்டுறவு வங்கிகள் வழங்கப்பட்ட நகை கடன்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து தகுதியான நபர்களுக்கு இந்த நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்றும், ஒரே நபர்கள் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானம் வைத்துள்ளார்களா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் நகை கடன் வழங்கிய நகைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும் அவைகள் தரம் குறித்தும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 108 கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது.

அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள 15 குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிவரை ஆய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மாவட்டத்தில் 21,450 பேருக்கு நகைகடன் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதன் ஆவன்களை முறையாக பரிசீலித்து நவம்பர் 20ஆம் தேதி அதன் அறிக்கைகளை கூட்டுறவு பதிவாளருக்கு அனுப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |