Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “செல்வ நிலை உயரும் நாள்”…. மற்றவரிடம் மதிப்பு கூடும்..!!

கடவுளின் அருளை பரிபூரணமாக பெற்று கொண்ட கன்னி ராசி அன்பர்களே.!! இன்று செல்வ நிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதர வழி பிரச்சினைகள் அகலும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவுகளை எடுப்பீர்கள். இன்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரவு கூடும். பயணம் செல்ல நேரிடும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள  வேண்டியது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடும். மன திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்தி சாதுரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவரிடம் மதிப்பு கூடும்.

இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் முழு கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |