குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவீடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோத்தன்பர்க்கில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணிக்கு பயங்கரமான குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 3 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் குண்டுவெடிப்பினால் குடியிருப்பு பகுதியில் பற்றி எறிந்த நெருப்பு அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவ தொடங்கியது. இதனால் அங்கு வசித்து வந்த 200 க்கும் மேற்பட்ட மக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியிலுள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.