அரண்மனை-3 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Set a reminder, the day you have been waiting for has arrived. #Aranmanai3 trailer drops on 30th of Sep at 5pm.💥#SundarC @RedGiantMovies_@Udhaystalin @arya_offl @CSathyaOfficial @RaashiiKhanna_ @uksrr @FennyOliver @iyogibabu @saregamasouth @RIAZtheboss @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/eXHiZsho57
— KhushbuSundar (@khushsundar) September 28, 2021
அவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா சி இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற ஆயுத பூஜை தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அரண்மனை-3 படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.