ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6, 9 ஆகிய இரண்டு நாட்கள் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை பொது விடுமுறை அளித்துள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 28 மாவட்டங்களில் 9ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அந்தந்த பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.