பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சூழலில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சித்து தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், தொடர்ந்து காங்கிரசில் இருந்து பணிபுரிய விரும்புவதாகவும் சோனியா காந்திக்கு சித்து கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே டெல்லியில் வைத்து பாஜகவின் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் அமரீந்தர் சிங்க் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.