தனது சுய புத்தியால் முன்னேற்றமான சூழ்நிலையில் காணக்கூடிய விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுத்த முடிவை திடீரென மாற்றியமைத்துக் கொள்வீர்கள். ஏராளமான செலவுகள் வருகின்றது என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நிலையில் சின்னதாக மாற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று மற்றவருக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கவனம் இருக்கட்டும். இன்று உங்கள் பெயர் புகழ் கௌரவம் யாவும் உங்களை தேடி வரக்கூடும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உங்கள் எண்ணம் போல் உங்களது வாழ்க்கை அமையும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். கலைத்துறையினருக்கு உற்சாகமாக ஈடுபட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அனைவரின் பாராட்டுகளையும் இன்று நீங்கள் பெறுவீர்கள்.
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருக்கும். பழைய பிரச்சினைகள் தீரும் நாளாகவும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். கல்வியில் அதிகப்படியான ஆர்வம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் மிக முக்கியமாக காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு செல்லுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள். நீங்கள் மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்