டாக்டர் படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டாக்டர் படத்திலிருந்து Soul Of Doctor என்ற புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மாஸ் புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.