14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடைபெறும் 42 -வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல்ராகுல் – மந்தீப் சிங் ஜோடி களமிறங்கினர் .
இதன் மந்தீப் சிங் 15 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். இதன் பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் , ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இதில் ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க ,அவரைத் தொடர்ந்து பூரன் 2 ரன்னில் வெளியேறினார். இதனால் 12 ஓவரில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் குவித்துள்ளது