Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி”…. இன்று அனைவரின் ஆதரவும் கிடைக்கும்..!!

மற்றவரின் நலமே தன்னுடைய நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களே..!! இன்று யோகமான நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி கிடைக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். அதிகாரிகளால் நன்மை ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவது மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் மனநிறைவிற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய கூடும். வேலை செய்யும் இடத்திலும் மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். இன்று அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் ஏற்படும். உங்களுடைய மனம் இன்று கொஞ்சம் அலை பாயக்கூடும். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான இடத்தை பெறக்கூடும். விளையாட்டில் இன்று ஆர்வம் செல்லும். இன்று சக மாணவருடன் பேசும் பொழுது கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிற ஆடையை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு  உணவை வைத்துவிட்டு இன்று காரியங்களை மேற்கொள்ளுவது சிறப்பை கொடுக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள். இன்று நாள் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |